ஹைலைட்ஸ்:

  • கவிதா குறித்து பேசிய ராஜ் குந்த்ரா
  • கவிதா செய்த துரோகத்தால் வேதனை- ரீனா குந்த்ரா
  • ஷில்பா ஷெட்டி மீது புகார் தெரிவித்த கவிதா

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷில்பாவால் தான் ராஜ் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அவரின் முன்னாள் மனைவி கவிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ராஜ் குந்த்ரா விளக்கம் அளித்திருக்கிறார். ராஜ் கூறியதாவது,

என் மாஜி மனைவிக்கும், மச்சினனுக்கும் கள்ளத்தொடர்பு: நடிகையின் கணவர் திடுக் தகவல்

நானும், கவிதாவும் பிரிய ஷில்பா காரணம் இல்லை. நான் லண்டனில் என் அம்மா, சகோதரி, கவிதாவுடன் வசித்து வந்தேன். அப்போது என் சகோதரியின் கணவருக்கும், கவிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனால் தான் அவரை பிரிந்தேன். அவர் செய்ததை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்றார்.

இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் சகோதரி ரீனா கூறியிருப்பதாவது,

கவிதாவை நான் அண்ணியாக பார்க்கவில்லை மாறாக என் சொந்த அக்காவாக பார்த்தேன். அவர் மீது அதிக பாசம் வைத்திருந்தேன். கவிதாவை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

shilpa shetty

அவர் செய்த துரோகத்தால் மனமுடைந்து போய்விட்டேன் என்றார்.

கவிதாவின் குற்றச்சாட்டு குறித்து முன்பு ஷில்பா ஷெட்டி கூறியதாவது,

நான் கவிதாவையும், ராஜையும் பிரிக்கவில்லை. நான் ராஜை சந்தித்தபோது அவருக்கு ஏற்கனவே விவாகரத்தாகியிருந்தது. கவிதாவும், ராஜும் பிரிந்து 4 மாதங்கள் கழித்து தான் நான் அவரை முதல்முறையாக சந்தித்தேன் என்றார்.

தற்போது கவிதாவின் வீடியோ வைரலானதை பார்த்த ஷில்பா வேதனை அடைந்ததாக ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.