ஹைலைட்ஸ்:

  • வித்யா பாலனின் ஷெர்னி திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.
  • கடந்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது வித்யா பாலனின் சகுந்தலா தேவி.
  • ‘ஷெர்னி’ திரைப்படத்தில் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வித்யா பாலன்.

வித்யா பாலன் நடிப்பில் கடைசியாக வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது வித்யா பாலனின் அடுத்த திரைப்படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஷெர்னி என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஜுன் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக வித்யா பாலன் தனது வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டி சீரிஸ் தயாரிப்பில், ‘நியூட்டன்’ திரைப்படத்தை இயக்கிய அமித் மசுர்கார் ஷெர்னி படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன், ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மனிதர்களால் வனங்களுக்கும் வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதைச் சரிசெய்ய நினைக்கும் நேர்மையான வன அதிகாரி ஒருவரைப் பற்றியும் விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் வன அதிகாரியாக வித்யா பாலன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பது குறித்து கடந்த பிப்ரவரின் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஷெர்னி திரைப்பட வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில், “இவள் தன் தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறாள். ஷெர்னியை ஜூன் மாதம் ப்ரைமில் சந்தியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

பிஏ கேட்ட பிரபல இயக்குனர்: சம்பளமே வேண்டாமென லைன் கட்டி குவிந்துள்ள விண்ணப்பங்கள்!
நடிகை வித்யா பாலனும் ஷெர்னி திரைப்பட ரிலீஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 2021 ஜுன் மாதத்தில் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும். அத்துடன் பயமின்றி இந்த உலகை காண வர போகிறாள். எனது புதிய படமான ஷெர்னி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜுன் மாதத்தில் பிரைம் வீடியோவில் ஷெர்னி என குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் போஸ்டரும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வனத்துக்கு நடுவில், துப்பாக்கியின் குறியில் வித்யா பாலன் சிக்கியிருப்பது போன்றும், அவர் கையில் வாக்கி டாக்கியுடன் நிற்பதை போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.