ஹைலைட்ஸ்:

  • அஜித் பற்றி திடுக் தகவல் வெளியிட்ட கனல் கண்ணன்
  • வலிமை ஸ்டண்ட் காட்சி கவலையில் ரசிகர்கள்

அஜித் தான் நடிக்க வந்த புதிதில் இருந்து இன்று வரை ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட ஒத்துக்கொள்வது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி ஸ்டண்ட் காட்சிளில் நடித்தபோது காயம் ஏற்பட்டு பல முறை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

எத்தனை முறை அடிப்பட்டாலும் டூப் மட்டும் போட மாட்டேன் என்று அடம்பிடித்து நடிக்கிறார் அஜித். இது தான் அவரிடம் ரசிகர்களுக்கு பிடிக்காத ஒரே விஷயம்.

அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தின் சென்னை ஷெட்யூலில் பைக்கில் இருந்து விழுந்து அடிபட்டது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அஜித் பற்றி பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பேட்டி ஒன்றில் கனல் கண்ணன் கூறியதாவது,

ஹீரோக்களுக்கு என்ன கோடி, கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள், அவர்களின் வாழ்க்கை ஜாலி என்பார்கள். ஆனால் ஹீரோவாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல, ரொம்ப கஷ்டம். அஜித் சாருக்கு எல்2, எல்4 டிஸ்கே கிடையாது. அதை நீக்கிவிட்டார்கள். அதை வச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்கார். ஒரு எலும்பு இல்லாமல் இருக்காரு. அது எல்லாம் சாதாரண விஷயமே கிடையாது என்றார்.

வலிமை படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க கிழக்கு ஐரோப்பாவுக்கு செல்லவிருக்கிறார்கள். அங்கு அஜித் நல்லபடியாக நடித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை ஆகும்.

இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் வராமல் இருந்த நிலையில் மோஷன் போஸ்டர், ஹெச்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அதில் அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதல்முறையாக ரூ. 25 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்