ஹைலைட்ஸ்:

  • எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ளது வலிமை.
  • வலிமை திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
  • வலிமை திரைப்படம் குறித்து சுரேஷ் சந்திரா புதிய அப்டேட்.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படம் சம்பந்தமான அறிவிப்பிற்காக ஓராண்டாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இந்நிலையில் வலிமை படம் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா.

நீண்ட் காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து கொண்டே இருந்தனர் அஜித் ரசிகர்கள். இதனையடுத்து மே 1 தேதி வெளியாக இருந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா. அதில், வலிமை படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்பட வேண்டியுள்ளது. கதைப்படி வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி அது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு, அந்த சண்டைக் காட்சியை எடுப்பது என முடிவு செய்துள்ளோம். ஒருவேளை வெளிநாடு செல்ல கட்டுப்பாடுகள், குறித்த காலத்திற்குள் தளர்த்தப்படவில்லையெனில் மாற்று ஏற்பாட்டிற்கும் தயாராக உள்ளது படக்குழு.

ஹீரோவாகும் காளி வெங்கட்: சாய் பல்லவிக்கு பதிலாக ஓகே சொன்ன ரித்விகா!
இந்த சண்டைக்காட்சி தவிர்த்து சிறுசிறு பேட்ச் ஒர்க் மட்டுமே உள்ளது.போஸ்ட் புரொடக்ஷனைப் பொறுத்தவரை, இதுவரை எடுத்த காட்சிகளில் பெரும்பாலானவற்றிற்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்டதாக சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் #valimai update என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பரில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். கொரேனா ஊரடங்கு காரணமாக தள்ளி நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு விரைவில் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.