ஹைலைட்ஸ்:

  • தூங்காமல் ட்வீட் போட்ட பிரேம்ஜி அமரன்
  • மாநாடு அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் எப்பொழுது பார்த்தாலும் ட்விட்டரில் இருக்கிறார். 1.11, 11.11, 5.55 என்று நேரம் பார்த்து அந்த எண்களை ட்வீட் செய்வார்.

இல்லை என்றால் நடிகைகள் யாராவது புகைப்படம் வெளியிட்டால் அதை பார்த்து அசந்து போய் ஒரு GIF வீடியோவை வெளியிடுவார். பிரேம்ஜி எந்த GIF வீடியோவை பயன்படுத்துவார் என்று சமூக வலைதளவாசிகளிடம் கேட்டால் சரியாக சொல்வார்கள். அந்த அளவுக்கு ஒரே வீடியோவை பாரபட்சமின்றி பயன்படுத்துகிறார்.

premgi

இந்நிலையில் அதிகாலை 4.10 மணிக்கு அனைவரும் நலமா என்று ட்வீட் செய்திருக்கிறார் பிரேம்ஜி. அதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

நலம் விசாரிக்கும் நேரத்தை பாரு. என்ன பிரேம்ஜி, உங்களுக்கு இன்சோம்னியாவா?. இரவானால் தூக்கம் வராத பிரச்சனை இருக்கிறது போன்று.

இல்லை பார்ட்டியில் இருந்து தற்போது தான் வீட்டிற்கு வந்தீர்களா?. குடிபோதையில் எதையைாவது உளறுவதற்கு முன்பு போய் படுத்து தூங்குங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பிரேம்ஜி அமரனுக்கு பெண் பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது. அது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிம்பு ரசிகர்களோ மாநாடு அப்டேட் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
வயதான காலத்தில் காதலருடன் ஓட்டம் பிடித்த அப்பத்தா: அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்

கலைஞர் என்று பெயர் வைத்தவர் எனது தந்தை தான் : ராதா ரவி