ஹைலைட்ஸ்:

  • விஜய் சேதுபதி ஒரு சாப்பாட்டு பிரியர்- மாஸ்டர் ஷெஃப் இயக்குநர்
  • ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் மாஸ்டர் ஷெஃப்

கோலிவுட்டின் பிசியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியின் டைரக்டரான சஞ்சீவ் கே. குமார் விஜய் சேதுபதி பற்றி கூறியிருப்பதாவது,

ஒரு பிரபலத்தால் இந்த நிகழ்ச்சியை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பினேன். விஜய் சேதுபதி அதற்கு சரியான ஆள். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். அவருன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

லாக்டவுனுக்கு முன்பே இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் சேதுபதியை அணுகினோம். மாஸ்டர் ஷெஃப்பை தொகுத்து வழங்க அவர் ஆர்வம் காட்டினார். லாக்டவுன் முடிந்த பிறகு அனைத்தும் ஒர்க்அவுட்டானது.

விஜய் சேதுபதி மிகப் பெரிய சாப்பாட்டு பிரியர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் அடிக்கடி சமைக்காவிட்டாலும், உணவு மீதான அவரின் ஆர்வம் அருமை. அது தான் இந்த நிகழ்ச்சிக்கு உதவியது. ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நானும், அவரும் தமிழ் உணவு வகைகள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். அவர் சில உள்ளூர் மற்றும் பலருக்கும் தெரியாத ரெசிபிக்களை எல்லாம் பரிந்துரைத்தார். அவரின் உதவியால் புது ஐடியாக்கள் உருவானது என்றார்.

மாஸ்டர் ஷெஃப் தமிழ் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. வார இறுதிநாட்களில் இனி மாஸ்டர் ஷெஃப்பை பார்க்கலாம்.

மாஸ்டர் ஷெஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

ஏம்மா ஸ்ருதி, காதலர் வரைய உடம்பில் அந்த இடத்தையா காட்டுவது?: விளாசும் நெட்டிசன்ஸ்