ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் பீட்டில் அழுத ஷமிதா ஷெட்டி
  • ஷில்பாவின் தங்கையாகத் தான் தெரிகிறது- ஷமிதா ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா. அக்காவை போன்று நடிகையானவர். ஆனால் ஷில்பா அளவுக்கு ஷமிதாவால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் ஷமிதா ஷெட்டி கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஷமிதாவுக்கும், ராகேஷ் பாபட்டுக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. கரண் ஜோஹர் சில கேள்விகளை கேட்டதும் ஷமிதா அழுதுவிட்டார்.

இந்நிலையில் தன் அடையாளம் குறித்து ஷமிதா ஷெட்டி கூறியதாவது,

திரையுலகில் 20 முதல் 25 ஆண்டுகளாக என்னுடைய பயணம் மிகவும் கடினமாக இருக்கிறது. தற்போது தான் ஒரு பெண்ணாக என் மீது நம்பிக்கை வந்திருக்கிறது. ஷில்பாவின் தங்கை ஷமிதா ஷெட்டி என்று தான் மக்களுக்கு என்னை தெரியும்.

அது பாதுகாப்பானது தான். அதற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் மக்களுக்கு என்னை மட்டும் தெரியாது என்றார்.

ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து, விநியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஷமிதா பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் செக்ஸ்: ஓபனாக பேசிய வாரிசு நடிகை