ஹைலைட்ஸ்:

  • பிரசவம், வெயிட் பிரச்சனை குறித்து பேசிய சமீரா ரெட்டி
  • முதல் பிரசவத்திற்கு பிறகு நடந்தது குறித்து மனம் திறந்த சமீரா ரெட்டி
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணமான சமீரா ரெட்டி

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ள அவர் தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹன்ஸ் என்கிற மகனும், நைரா என்கிற மகளும் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு சமீரா படங்களில் நடிக்கவில்லை. சமீரா, அவரின் கணவர், பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தற்போது தான் குணமாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரசவம், எடை பிரச்சனை குறித்து சமீரா ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

முதல் குழந்தை பிறந்தபோது என் கணவர் தான் அதை கவனித்துக் கொண்டார். டயபர் மாற்றுவது முதல் அனைத்தையும் செய்தார். உனக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கிறது, ஆதரவான கணவர் இருக்கிறார், அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறாய் என மாமியார் என்னிடம் கேட்டார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் நான் அழுதேன். ஹன்ஸை கவனித்துக் கொள்ளாததை நினைத்து வருத்தப்பட்டேன். ஓராண்டு காலமாக நான் அப்படித் தான் இருந்தேன். அடிக்கடி அழுவேன். திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டேன்.

என் எடை 105 கிலோவாக இருந்தது. எனக்கு Alopecia areata இருப்பது தெரிய வந்தது. கொத்து கொத்தாக முடி கொட்டியது. இதையடுத்து மருத்துவரை அணுகி எனக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் கூறினேன். அதன் பிறகு நான் புது மனுஷியாகிவிட்டேன் என்றார்.

முதல் பிரசவத்திலேயே கஷ்டப்பட்ட சமீராவுக்கு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட அதை கணவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, முதல் பிரசவத்தின்போது நடந்ததை மறந்துவிட்டாயா, மீண்டும் கஷ்டப்படணுமா என்று கேட்டிருக்கிறார்.

இந்த முறை பிரசவத்தை எதிர்கொள்ள தைரியமாக இருக்கிறேன் என்று கூறி மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பமானதில் இருந்து இதுவரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதுடன், பிறருக்கு தைரியம் கூறி வருகிறார் சமீரா ரெட்டி.

குஷ்புவுக்கு குவியும் வாழ்த்துக்கள்: எதற்காக தெரியுமா?