அழகுச் சிலையாக கோலிவுட்டுக்கு வந்தவர் அந்த நடிகை. அவரை பார்த்துவிட்டு கட்டினா இப்படி ஒரு குடும்ப குத்துவிளக்கை தான் கட்டணும் என்று அடம் பிடித்தவர்கள் பலர். ஆனால் நடிக்க வந்த வேகத்தில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் தன்னுடன் ஹீரோவாக நடித்த ஒருவருக்கு நடிகை தூதுவிட்டிருக்கிறார்.

நம்ம கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் சேர்ந்து நடிக்கலாம், என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். நடிகரின் தற்போதைய நிலையே வேறு. இந்நிலையில் அவர் நடிகை தூதுவிட்டதை கண்டுகொள்ளவில்லையாம்.

காத்திருந்து காத்திருந்து கடுப்பான நடிகை அடப் போயா என்று பிற நடிகர்களின் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். நான் என்ன ஹீரோயின் வாய்ப்பா கேட்டேன், அதற்கே இந்த அளவுக்கு ஓவராக பண்றாரே அந்த நடிகர். அவர் இல்லைனா என்னால் பிழைக்க முடியாதா என்ன என்று சொல்கிறாராம் நடிகை.