ஹைலைட்ஸ்:

  • நடிகர் டோனி பேகரின் மகன் செரைன் சாலை விபத்தில் பலி
  • செரைனின் நண்பர்கள் இருவரும் பலி

A Black Lady Sketch Show தொலைக்காட்சி நிகழ்ச்சி புகழ் நகைச்சுவை நடிகர் டோனி பேகரின் மகன் செரைன்(21) தன் நண்பர்கள் ஜேடன் ஜான்சன்(20), நடாலி மொகத்தம்(19) மற்றும் ஒருவருடன் காரில் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் பர்பாங்க் பகுதியில் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் செரைன், ஜேடன், நடாலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நான்காவது நபர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து டோனி கூறியதாவது,

என் மகன் இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை. அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

விபத்து குறித்து போலீாசர் கூறியதாவது,

செரைன் பேகர் வெள்ளி நிற காரில் வந்தார். அந்த வழியாக வந்த கியா மற்றும் கருப்பு நிற பென்ஸ் கார் செரைன் கார் மீது மோதியது. கியா மற்றும் பென்ஸ் காரில் இருந்தவர்கள் சாலையில் ரேஸ் நடத்தியது போன்று இருந்தது.

பென்ஸ் காரில் இருந்தவர்களுக்கு காயம் இல்லை. ஆனால் கியாவில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். செரைனின் கார் படுமோசமாக சேதமடைந்தது. பின்பகுதி முற்றிலும் சேதமடைந்துவிட்டது என்றார்கள்.

இது போன்று ஒரு மோசமான விபத்தை தன் 19 ஆண்டு கால பணியில் பார்த்ததே இல்லை என்று போலீஸ் அதிகாரி எமில் ப்ரிம்வே தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ராவுக்கு பதில் ஷிவ்பால் சிங் போட்டோவை வெளியிட்ட கமல்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்