தமிழ் சினிமாவில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது `ஜெயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இந்தப்படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அபர்ணா தாஸ் அவர் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 9ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற சிறப்பான படங்களை இயக்கிய வசந்தபாலனின் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகவுள்ள படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒருவருட போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: நடிகர் கார்த்தி ட்வீட்!
அதே போல் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படமும் ரிலீசுக்கு தயாரான நிலையில் டிசம்பர் 3ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்களின் selfie மழையில் ராஷ்மிகா மந்தனா!