ஹைலைட்ஸ்:

  • சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?
  • கை நிறைய படங்கள் வைத்திருக்கும் தனுஷ்

கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவரான தனுஷை வைத்து படம் எடுக்க பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குடும்ப ஆடியன்ஸை சிரிக்க வைத்து தன் பக்கம் வைத்திருக்கும் சுந்தர் சி.யின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். தனுஷ் தற்போது மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார்.

தன்னை வைத்து கர்ணன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் தனுஷ். அந்த வெற்றிக் கூட்டணியின் பட வேலை அடுத்த ஆண்டு துவங்குமாம். மாரி செல்வராஜ் தற்போது த்ருவ் விக்ரமை வைத்து ஸ்போர்ட்ஸ் டிராமா படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே சுந்தர் சி. இயக்கியிருக்கும் அரண்மனை 3 படம் அக்டோபர் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை படத்தை அடுத்து ஆர்யா நடிப்பில் வெளியாகும் படம் அரண்மனை 3.

சமந்தா, நாக சைதன்யா பிரிய விவாகரத்து எக்ஸ்பர்ட் நடிகரே காரணம்: நடிகை புகார்