ஹைலைட்ஸ்:

  • குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்
  • ஹேக் செய்து 3 நாட்களாகிவிட்டது

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கில் பிரையன் என்கிற பெயர் இருக்கிறது. குஷ்பு போட்ட ட்வீட்டுகள் எதுவும் இல்லை. இந்நிலையில் இது குறித்து குஷ்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து, ட்வீட்டுகள் நீக்கம்: யார் அந்த பிரையன்?அந்த அறிக்கையில் குஷ்பு கூறியிருப்பதாவது,

என் ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். கடந்த மூன்று நாட்களில் அந்த கணக்கில் இருந்து ஏதாவது ட்வீட் வந்திருந்தால் அது நான் செய்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

khushbu

குஷ்பு அளித்த விளக்கத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

சினிமா பிரபலம், அதுவும் மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கும் குஷ்புவின் ட்விட்டர் கணக்கையே உடனே மீட்க முடியவில்லை என்றால் சாதாரண ஆட்களின் நிலைமை பற்றி சொல்லவா வேண்டும். ட்விட்டரில் குஷ்புவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

அந்த பிரையன் யாராக இருக்கும், ஏன் குஷ்புவை குறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லையே என தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு குஷ்பு எந்த அளவுக்கு ஆக்டிவாக ட்வீட் செய்வார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சினிமா, நாட்டு நடப்பு என்று பல விஷயங்கள் பற்றி பேசுவார். மேலும் தன்னை யாராவது மோசமாக பேசினால் நெத்தியடி கொடுப்பார்.

தன்னை பாராட்டும் ரசிகர்கள் நன்றி தெரிவித்து ட்வீட் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.