ஹைலைட்ஸ்:

  • கீர்த்தி சுரேஷை கிண்டல் செய்யும் ரசிகர்கள்
  • அண்ணாத்த பாடலை லேட்டாக வெளியிட்ட கீர்த்தி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படத்தில் வரும் டைட்டில் பாடலை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்கள். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

எஸ்.பி.பி. இறக்கவில்லை, அவர் தன் இசை மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

keerthy

இந்நிலையில் அண்ணாத்த பாடலை கீர்த்தி சுரேஷ் இன்று காலை தான் ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
என்ன அவசரம், பொறுமை பொறுமை. உங்களின் பிசியான நேரத்தில் விரைவாக ட்வீட் செய்ததற்கு நன்றி.
என்ன ஒரு வேகம் கீர்த்திமா.
என்ன அவசரம்னு இன்றே போஸ்ட் செய்துவிட்டீர்கள். பொறுமையாக நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ட்வீட் செய்திருக்கலாமே. படத்தின் மீதான உங்கள் மரியாதை இதில் இருந்தே நன்றாக தெரிகிறது.

மின்னல் வேகத்தில் ட்வீட் செய்துவிட்டார் கீர்த்தி. நேற்று மாலையே பாடல் வெளியாகி நாங்கள் எல்லாம் கேட்டாச்சு என தெரிவித்துள்ளனர்.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அண்ணன், தங்கை இடையோன பாசம் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Samantha:சமந்தாவும், கணவரும் பிரிய டிசைனருடனான உறவு காரணமா?