தமிழ் படம் மூலம் நடிகையானவர் அந்த உயர்ந்த நடிகை. முதல் படத்திற்கு பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கத் துவங்கினார்.

இந்தியில் அவரின் மார்க்கெட் பரவாயில்லை. ஆனால் தெலுங்கு திரையுலகில் அம்மணிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் அவர் உயரமான நடிகருடன் சேர்ந்து நடித்துள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தான் கோலிவுட்டின் முன்னணி நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. இது, இதை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் என்பது போன்று நடிகை உடனே ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்து முன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயினாகிவிட்டார்.

பல காலம் கழித்து கோலிவுட்டுக்கு வந்திருக்கும் நடிகையின் கவனம் அண்ணன் நடிகர் பக்கம் திரும்பியிருக்கிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து காரியத்தில் இறங்கிவிட்டாராம்.

கோலிவுட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்க, அம்மணியின் கவனம் ஏன் அண்ணன் நடிகர் பக்கம் திரும்பியிருக்கிறது என்று தான் கோடம்பாக்கத்தில் விவாதிக்கிறார்கள்.