பாலிவுட்டில் ஹிட்டடித்த அந்தாதூண் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் தன்னுடைய அப்பா தியாகராஜன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளில் நவரச நாயகன் கார்த்திக் கலந்து கொண்ட புகைப்படங்கள் இனையாத்தில் வைரலாகி வருகின்றன.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டத்து, தேசிய விருதுகளை பெற்ற ‘அந்தாதூன்’ படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

‘அந்தாதூன்’ படத்தின் தமிழில் ரீமேக்கை கைபற்றிய தியாகராஜன் அந்தகன் என்ற பெயரில் தன்னுடைய மகன் பிரசாந்த் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் , சிம்ரன், பிரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழுக்காக அந்தாதூன் படத்தில் ஒருசில மாறுதல்களையும் செய்துள்ளார் தியாகராஜன்.

‘சார்பட்டா பரம்பரை’ உலகை வைத்து ஒரு வெப் சீரிஸ்: பா.ரஞ்சித் மெஹா திட்டம்!
இந்நிலையில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கபட்ட அந்தகன் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. இந்த டப்பிங் பணிகளில் நவரச நாயகன் கார்த்திக் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. திரையரங்குகள் திறந்த பின்னர் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிரப்பார்க்கப்படுகிறது.

தமிழை போல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அந்தாதூண் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாளத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். ப்ரித்விராஜ், ராஷி கண்ணா இருவரும் இந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.