பிக் பாஸ் மூலம் கிடைத்த ஊடக வெளிச்சம் மூலமாக தன்னைத்தானே சூப்ப மாடல் என கூறி கொள்பவர் மீரா மிதுன். சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கூறிய கருத்துகளை கூறி, அதன் மூலம் கிடைக்கும் பப்ளிசிட்டி மூலம் தன்னை பிரபலமாக காட்டி கொள்பவர் இவர். இந்நிலையில் தலித் சமூகம் குறித்து மிகவும் இழிவாக மீரா மிதுன் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாடலான மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு முன்பே அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை மீரா மீதுன் ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மீரா மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்கள்.

இந்நிலையில் சமீப காலமாக நயன்தாரா, பிரியா ஆனந்த் மற்றும் பாடகி தீயும் உள்ளிட்டோர் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி இருந்தார் மீரா மீதுன். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், ‘நாராயணன் உங்க பொண்ணு ஏன் என் மூஞ்ச யூஸ் பண்றாங்க, அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என மிக இழிவாக பேசி இருந்தார்.

இந்தியன் 2 பட விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் மேல் முறையீடு!
இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு தலித் சமூகத்தினர் குறித்து மிக இழிவாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் மீரா மிதுன். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தான் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் மிகவும் இழிவாக பேசியுள்ளார் மீரா. அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஏற்கனவே விஜய், சூர்யா குறித்தும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார் மீரா மீதுன். இதற்கு பலரும் இணையத்தில் எதிர்வினை ஆற்ற, விஜய் சூர்யா ரசிகர்கள் தன்னை மன்னிக்குமாறு கூறி இருந்தார். இந்நிலையில் குறிப்பிட்ட சாதியினர் பற்றி மிக இழிவாக பேசியுள்ள மீரா மிதுனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.