நடிகை ஷில்பா ஷெட்டியால் தான் நானும், கணவர் ராஜ் குந்த்ராவும் பிரிந்தோம் என்று கவிதா தெரிவித்த வீடியோ தற்போது வைரலாகியிருக்கிறது.

ராஜ் குந்த்ரா

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இது ராஜின் இரண்டாவது திருமணமாகும். இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் முன்னாள் மனைவியான கவிதா தன் திருமண வாழ்க்கை குறித்து கடந்த 2007ம் ஆண்டு அளித்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஷில்பா ஷெட்டி

அந்த வீடியோவில் கவிதா கூறியதாவது, ராஜ் மற்றும் ஷில்பா சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து, நான் இருக்க வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறாரே என்று நினைத்தேன். நான் எங்கள் திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகளை தீர்க்க முயன்றபோது, ராஜ் எப்பொழுது பார்த்தாலும் ஷில்பா பற்றியே பேசினார். தனக்கு என்னை விட அழகான, அறிவான, பிரபலமான ஒருவர் கிடைத்துவிட்டார், இனி வேறு எதுவும் முக்கியம் இல்லை என்பது போன்று பேசினார். விவாகரத்து கேட்டு தொல்லை கொடுக்கிறார். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை என்றார்.

மறுப்பு

கவிதா பேசியதற்காக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டார் ராஜ் குந்த்ரா. ராஜும், ஷில்பாவும் தாங்கள் காதலிப்பதை பல மாதங்களாக மறுத்தனர். இந்நிலையில் தான் ராஜை காதலிப்பதை கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக் கொண்டார் ஷில்பா ஷெட்டி. கவிதா பிரிந்து சென்றபோது எனக்கு ராஜ் யார் என்றே தெரியாது. கவிதா சென்று நான்கு மாதங்கள் கழித்து தான் நான் ராஜை சந்தித்தேன். அப்பொழுது அவருக்கு விவாகரத்தாகியிருந்தது என்றார் ஷில்பா.

கள்ளத்தொடர்பு

தன் முன்னாள் மனைவி குறித்து ராஜ் தற்போது பேட்டி அளித்திருக்கிறார். கவிதாவுக்கும், தன் சகோதரியின் கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக ராஜ் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து என் அம்மாவிடம் பல முறை கையும், களவுமாக சிக்கினார்கள். இரண்டு குடும்பங்களை நாசமாக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அதை பற்றி யோசிக்கவே இல்லை என்றார்.