ஹைலைட்ஸ்:

  • அனுஷ்காவின் லேட்டஸ்ட் போட்டோ வைரல்
  • மீண்டும் வெயிட் போட்ட அனுஷ்கா
  • அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். அவருக்கு 39 வயதாவதால் தான் பெற்றோர் அவசரப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அனுஷ்காவுக்கும், துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

துபாய் தொழில் அதிபருக்கு மனைவியாகப் போகும் அனுஷ்கா?அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் சிறியவர் என்று கூறப்பட்டது. அனுஷ்காவுக்கு திருமணமாம் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த புகைப்படத்தில் அனுஷ்கா குண்டாக இருப்பது குறித்து ரசிகர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக அவர், ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடல் எடையை வெகுவாக ஏற்றி குண்டானார்.

அந்த படம் முடிந்த பிறகு அனுஷ்கா யோகா, உணவுக் கட்டுப்பாடு, ஜிம்மில் ஒர்க்அவுட் என்று என்னவெல்லாமோ செய்தும் எடை மட்டும் குறையவில்லை. எடை விவகாரத்தால் பாகுபலி 2 படத்திலும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து அனுஷ்கா வெளிநாட்டிற்கு சென்று தன் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டு நாடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் வெயிட் போட்டிருக்கிறது. குண்டாக இருந்தாலும் அனுஷ்கா அழகாகத் தான் இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான நிசப்தம் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் அனுஷ்காவின் கெரியர் தற்போது டல்லடித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் திரையுலகம் முடங்கிப் போயிருக்கிறது. இந்த நேரத்தில் தான் அனுஷ்கா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். துபாய் மாப்பிள்ளை பற்றி அனுஷ்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

முன்னதாக கூட அனுஷ்காவுக்கு திருமணம் என்று செய்திகள் வெளியானது. அதை பார்த்த அவரோ, எனக்கு திருமணம் நடக்கும்போது நானே கூறுகிறேன் என்றார்.