தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை கொண்டு வந்ததுடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்த இந்த திட்டத்தை தற்போது ஸ்டாலின் அமல்படுத்தி உள்ளார். இந்நிலையில் தமிழில் அர்ச்சனை எனற திட்டத்தை வரவேற்கும் விதமாக அஜித்தின் ‘பில்லா‘ பாடலை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த சட்டத்துடன் ஒப்பிட்டு நடிகர் அஜித்தின் ’சேவல் கொடி பறக்குதடா’ என்ற பாடல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த பில்லா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடலாசிரியர், பா.விஜய் எழுதியிருந்தார். இந்நிலையில் தற்போது பில்லா படத்தில் இடம்பெற்றுள்ள, ‘சேவல் கொடி பறக்குதடா’ என்ற பாடல் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

‘அவன் இவன்’ பட விவகாரம்: நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இயக்குனர் பாலா!
குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெறும் ’தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு’ என்ற வரிகளை குறிப்பிட்டு அனைவரும் அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘அன்றே சொன்னார் அஜித்’ எனக் குறிப்பிட்டு, அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை பகிர்ந்து வருகிறார்கள்.