ஹைலைட்ஸ்:

  • லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட சிம்பு
  • சிம்புவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு குண்டாக இருந்தது, அதன் பிறகு தன் ரசிகர்களுக்காக ஒரேயடியாக எடையை குறைத்து ஒல்லியானது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த கதை தான்.

ஸ்லிம்மான பிறகு சிம்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நண்பர்கள் தினமான இன்று தன் ரசிகர்களை மகிழ்விக்க தன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சிம்பு.
சிவபெருமானை வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஃபீல் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

அதாவது அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோதும் சிம்பு அதே சிவன் கோவில் முன்பு நின்று புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு 6 ஆண்டுகளில் என்ன ஒரு மாற்றம் என்கிறார்கள் ரசிகர்கள்.

மேலும் 12.33 மணிக்கு அவர் தன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 1+2+3+3 ஆகிய எண்களை கூட்டினால் 9 வருகிறது. சிம்பு பட அப்டேட்டுகள் எல்லாம் வெளியாகும் நேரத்தில் இருக்கும் எண்களை கூட்டினாலும் 9 வரும். சிம்புவுக்கு ராசியான எண் 9. அதனால் தான் அவர் நேரம் பார்த்து வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது.

கெரியரை பொறுத்தவரை வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ வாழ்க்கையில் ‘சாய்வாலா’ ஆன நயன்தாரா: எப்படினு தெரியுமா?