ஹைலைட்ஸ்:

  • ஸ்ருதி சொன்னதை கேட்டு வேதனைப்பட்ட கமல்
  • சலார் படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் தன் தந்தை கமல் ஹாசன் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகை மந்திரா பேடியின் டாக் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ருதி ஹாசன் கூறியதாவது,

எனக்கு ஒன்பது வயது இருந்தபோது நான் செய்த காரியம் அது. ஐன்ஸ்டைன் அல்லது அது போன்று வேறு யாராவது பிரபலத்திற்கு சொந்தமாக இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். இதை அப்பாவிடம் கூறியபோது அவர் வேதனைப்பட்டார்.

ஸ்ருதி, நான் பிரபலமானவன் தான். என்னை நிறைய பேருக்கு பிடிக்கும் என்றார் அப்பா. ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கேறன் என்றேன். இல்லை, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரியவில்லை என்றார் அப்பா.

ஆறு வயதில் பரதநாட்டியம் வகுப்பில் இருந்து விலகினேன். என் அப்பாவின் குரு தான் கிளாஸ் நடத்தினார். என் அப்பா பெரிய பரதக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆறு வயதில் நான் அவரை மாதிரி ஆட முடியாது. எனக்கு பரதம் மீது ஈடுபாடும் இல்லை. நான் மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆட விரும்பினேன்.

நான் என் அப்பா போன்று நன்றாக ஆடவில்லை என்றார்கள். இது எனக்கு சரிபட்டு வராது என்று முடிவு செய்தேன். அந்த வகுப்பில் இருந்து எப்படி வெளியேறுவது என்கிற வழியை கண்டுபிடித்து அதன்படி செய்தேன் என்றார்.

நேற்றிரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிடுச்சாமே?: சமந்தா மாஜி கணவரை கேட்ட அப்பா