கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் நடித்திருக்கும் ஓ மணப்பெண்ணே படம் அக்டோபர் 22ம் தேதி அதாவது நாளை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டாவின் பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இது.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது ஹரிஷ் கல்யாண் கூறியதாவது,

பெல்லி சூப்புலு படம் பார்த்தபோது இது போன்ற படத்தில் நாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்பொழுது என்னை வைத்து படம் தயாரிக்க யாரும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகே இந்த பட வாய்ப்பு என்னை தேடி வந்தது. ஆனால் கை நழுவிச் சென்று மீண்டும் கிடைத்தது.

இந்த படத்தில் ஏதோ ஷ்பெஷலாக இருப்பதால் தான் கைநழுவிய வாய்ப்பு மீண்டும் கிடைத்தது என்று தோன்றியது. கார்த்திக் சுந்தர் என் நீண்டகால நண்பர். நாம் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று பேசியிருக்கிறோம். இந்நிலையில் அவர் இயக்கத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

டிஸ்னி போன்ற ஓடிடி தளத்தில் ரிலீஸாவதால் பெரிய அளவில் ரீச் இருக்கும் என்று நம்புகிறோம். 18 படங்களில் நடிக்கும் இந்த பிசியான நேரத்திலும் கூட எங்கள் படத்தில் நடித்துக் கொடுத்த ப்ரியா பவானிசங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ரியா எனக்கு நல்ல நண்பர். இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

மறுபடியுமா, எவன் பார்த்த வேலைடா?: செம கோபத்தில் பீஸ்ட் இயக்குநர்