ஹைலைட்ஸ்:

  • சுடுகாட்டில் நடிக்க பயந்து நடுங்கிய நடிகை
  • சுடுகாட்டில் நடந்த ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் ஷூட்டிங்

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் படம் ருத்ரன்.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். கடந்த அமாவாசை அன்று ருத்ரன் படக்குழு சுடுகாட்டிற்கு சென்றிருக்கிறது.

அமாவாசை, சுடுகாடு என்றெல்லாம் பார்க்காமல் ராகவா லாரன்ஸ் அசால்டாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு அம்மாவாக முன்னாள் ஹீரோயின் ஒருவர் நடித்து வருகிறார். இரவு நேர படப்பிடிப்பு என்று தெரியும். ஆனால் காரில் வந்த நடிகை சுடுகாட்டை பார்த்ததும் பயந்துவிட்டாராம்.

சுடுகாட்டில் அதுவும் இரவு நேரத்தில் நடிக்கணுமா என்று கேட்டு நடிகை நடுங்கினாராம். இதையடுத்து மறுநாள் சுடுகாடு போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்த அந்த நடிகை சந்தோஷமாக நடித்தாராம்.

பேய் படங்களை பார்த்து சினிமா ரசிகர்கள் பயந்த காலம் மலையேறி தற்போது விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. அதற்கு ராகவா லாரன்ஸ் ஒரு முக்கிய காரணம் எனலாம். மேலும் பேய் படங்கள் என்றால் ரசிகர்களுக்கு ஒரு தனி குஷியாகிவிடுகிறது.

எந்த பேய் படம் ரிலீஸானாலும் அதை ஹிட்டாக்காமல் விடுவது இல்லை. அதனாலேயே இயக்குநர்கள் பலரின் கவனம் பேய் படங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா அடித்து சாய் பாபாவின் முகத்தில் புகையை விட்ட மீரா மிதுன்: வைரல் வீடியோ