ஹைலைட்ஸ்:

  • நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
  • திரையுலகை சார்ந்தவர்கள் மாறனுக்கு இரங்கல்.
  • லொள்ளு சபா மாறன் வெளியிட்டுள்ள காணொளி.

நடிகர் விஜய் நடித்த குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் மாறன். துணை நடிகராக இருந்து வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் நேற்று காலை உயிரிழந்தார் மாறன்.

இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் நடிகர் மாறனுக்கு பதிலாக விஜய் டிவியில் லொள்ளு சபா புகழ் நடிகர் மாறனின் புகைப்படத்துடன் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாறன் இது குறித்து விளக்கமளித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த மாறன் தான் இல்லை என்றும் அது வேற மாறன் என்றும் கூறியுள்ள லொள்ளு சபா மாறன், சில ஊடகங்கள் தன் படத்துடன் செய்திகளை வெளியிட்டன. பின்னர் நான் இல்லை என்று தெரிந்ததும் தவறை சரிசெய்து விட்டார்கள் என்று கூறிய அவர், மாறன், அண்ணன் நெல்லை சிவா என தினமும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மரணங்கள் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

அழைத்தவன் எமன் என்று அறியாமல் சென்று விட்டாயே: மாறனின் மறைவு குறித்து வைரலாகும் கண்ணீர் பதிவு!
மேலும், நான் நல்லபடியாக இருக்கிறேன், அதே மாதிரி நீங்க எல்லாம் நல்லபடியாகவும், பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக இருங்கள். கொரனோ பெருந்தொற்று மிகவும் ஆபத்தானது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் திரைத்துறையில் வரிசையாக நிகழும் மரணங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி, மாறன் ஆகியோர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.