கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த அருண்ராஜா காமராஜின் மனைவி இறந்த செய்தியை கேட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் மூலம் இயக்குநரானார். அந்த படத்தை தன் நண்பனுக்காக சிவகார்த்திகேயன் தயாரித்தார். இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் காதல் மனைவி சிந்துஜா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38. சிந்துஜாவின் மரணம் குறித்து அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். காலையில் எழுந்ததுமே அருண்ராஜா அண்ணாவின் மனைவி இறந்த செய்தி இடியாய் இறங்கிவிட்டதே என்கிறார்கள்.

Twitter-SK THANGACHI

சதீஷ்

அவர்கள் காதலிக்கும் பொழுதிலிருந்தே நல்ல பழக்கம். மிக நல்ல பெண்… மிக நல்ல Pair… ஈடு செய்ய முடியாத இழப்பு அருண்ராஜா. உங்களை மிஸ் பண்ணுவோம் சகோதரி என சதீஷ் தெரிவித்துள்ளார்.

Twitter-Sathish

சேரன், மனோபாலா

சிந்துஜாவின் மரண செய்தியை சமூக வலைதளத்தில் பார்த்த மனோபாலா, அய்யோடா என்ன இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள் …. தைரியமாக இருங்க அருண்ராஜா காமராஜ் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

Twitter-Cheran

கார்த்திக் சுப்புராஜ்

அருண்ராஜா காமராஜுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் இழப்புக்கு சாரி என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Twitter-karthik subbaraj