ஹைலைட்ஸ்:

  • ஆடுகளம் படத்தின் புகைப்படங்கள் வைரல்
  • பாலிவுட் படத்திற்காக ஆடுகளம் படத்தில் இருந்து விலகிய த்ரிஷா
  • த்ரிஷாவுக்கு கை கொடுக்காத பாலிவுட் படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படம் மூலம் டாப்ஸி தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆடுகளம் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். அந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் த்ரிஷா தான்.

படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார் த்ரிஷா. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த வேகத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்த நேரத்தில் த்ரிஷாவுக்கு அக்ஷய் குமாரின் கட்டா மீட்டா இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே அவர் ஆடுகளம் படத்தில் இருந்து விலகினார்.

பிற நடிகைகளை போன்று த்ரிஷாவும் பாலிவுட் பட வாய்ப்பு வந்த உடன் ஏற்கனவே ஒல்லியாக இருந்த உடம்பை மேலும் ஒல்லியாக்கினார். ஆனால் பாவம், கட்டா மீட்டா படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக வேலை இல்லை.

நம்ம த்ரிஷா நடித்திருக்கிறார் என்று கட்டா மீட்டா படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றார்கள்.

இந்நிலையில் ஆடுகளம் படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனுஷ், த்ரிஷா இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

பாலிவுட் என்கிற பெயரால் ஏமாந்துவிட்டார் த்ரிஷா. அந்த கட்டா மீட்டாவில் நடித்ததற்கு பதிலாக ஆடுகளம் படத்தில் நடித்திருந்திருக்கலாம். நல்ல பட வாய்ப்பை இழந்துவிட்டார். ஆடுகளம், டாப்ஸிக்கு என்று எழுதி வைத்திருந்தது போன்று.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது த்ரிஷாவின் கதை என்று கூறி வருத்தப்படுகிறார்கள்.

கட்டா மீட்டா படத்திற்கு பிறகு த்ரிஷா பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை. அவர் ஏதோ எதிர்பார்த்து அந்த படத்தில் நடிக்க அது வேறு மாதிரி ஆகிவிட்டது தான் மிச்சம். பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற த்ரிஷாவின் ஆசையில் தவறு இல்லை. ஆனால் அவருக்கு கட்டா மீட்டா கைகொடுக்காமல் போய்விட்டது.

என்ன நடந்துச்சு, உண்மையை சொல்லுங்க சிம்பு: கேள்வி மேல் கேள்வி கேட்கும் ரசிகர்கள்