மாநாடு படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அது ஆன்லைனில் கசிந்துவிட்டது.

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான மாநாடு படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. படம் ரிலீஸாவதில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்து ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்தார்கள்.

விமர்சனம்

மாநாடு படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பிடித்திருக்கிறது. படத்தை பார்த்த அனைவரும் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாநாடு படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸ்

எந்த புதுப்படம் வெளியானாலும் அதை ஆன்லைனில் கசியவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்நிலையில் தான் மாநாடு படமும் கசிந்துவிட்டது. வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு செல்லலாம் என்று நினைத்தவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் படத்தை பார்த்துவிடுவார்கள்.

வசூல் பாதிப்பு

ஏற்கனவே மாநாடு பட ரிலீஸில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் படம் ஆன்லைனில் வேறு கசிந்துவிட்டது. இதனால் மாநாடு படத்தின் வசூல் தான் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.