சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக பிசியாக திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்னர் தொகுதிப் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தார். இதனால் அவர் கமிட் ஆன திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

சேப்பாக்கம் தொகுதியில் வென்று எம்எல்ஏ வாக பொறுப்பேற்றதில் இருந்து தொகுதி பக்கமே பம்பரமாக சுற்றி கொண்டிருந்தார் உதயநிதி. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இருக்கும் பொது கழிப்பிடம் சுத்தமாக இருக்கிறதா என பரிசோதனை செய்ததில் தொடங்கி, தொகுதி மக்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் வீட்டு பிள்ளையாகவே மாறிய வரை, அவரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அணைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுக்களை பெற்றது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக உதயநிதி மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வந்தார். இதில் அவர் ஜோடியாக ஆத்மிகா ஓப்பந்தமானார். இதுதவிர கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஹாரர் படமான ஏஞ்சல் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கிலும் நடிக்க முடிவு செய்திருந்தார் உதயநிதி.

நீண்ட இடைவெளி.. 50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை: விக்ரம் படப்பிடிப்பு குறித்து கமல் ட்விட்!
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பிசியான உதயநிதி ஸ்டாலின் இரண்டு மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் படப்பிடிப்புத்தளத்துக்கு திரும்பியுள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஷுட்டிங்கில் தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால், கலையரசன் உள்ளிட்டோரும் இந்த்ப்படத்தில் நடிக்கின்றனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார்.