ஹைலைட்ஸ்:

  • புஷ்பா படத்தில் குத்தாட்டம் போடும் சமந்தா
  • குத்தாட்டத்திற்கு ரூ. 1.5 கோடி கேட்டாரா சமந்தா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் புஷ்பா. பெரிதும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அடுத்தவரின் படத்தில் சமந்தா குத்தாட்டம் போடுவது இதுவே முதல் முறை ஆகும்.

அந்த பாடலில் சமந்தாவுடன் சேர்ந்து அல்லு அர்ஜுனும் ஆடவிருக்கிறார். சமந்தா முதல்முறையாக ஒரு பாடலுக்கு ஆடவிருப்பதால் அதை சிறப்பானதாக்க முயற்சி செய்வதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட ரூ. 1.5 கோடி கேட்டிருக்கிறார் சமந்தா என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இது குறித்து படக்குழு இதுவரை எதுவும் கூறவில்லை.

புஷ்பா படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் சமந்தா கதாபாத்திரத்தின் பெயர் கதிஜா ஆகும்.

சந்தானம் வச்சு செஞ்சுடுவாரோனு பயந்த குத் வித் கோமாளி புகழ்