ஹைலைட்ஸ்:

  • வனிதாவின் மேக்கப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
  • வனிதாவை பச்சை நிற லிப்ஸ்டிக்கில் பார்த்தவர்கள் கிண்டல்
  • பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த வனிதா விஜயகுமார் தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்டார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் வனிதா. அது ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். மேலும் ஹரி நாடார் ஜோடியாக 2கே அழகானது காதல் படத்தில் நடித்துள்ளார்.

இது தவிர்த்து வசந்தபாலன் இயக்கத்தில் கைதி படம் புகழ் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் படத்திலும் நடித்துள்ளார் வனிதா. மேலும் தியாகராஜன் தன் மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வரும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வனிதா கோட் சூட் அணிந்து டான்ஸ் ஆடினார். டான்ஸ் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அவரின் மேக்கப்பை பார்த்து தான் பலரும் பயந்துவிட்டார்கள்.

வனிதா பச்சை நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார். வித்தியாசமான நிறங்களில் லிப்ஸ்டிக் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் வனிதா. ஆனால் அது அவருக்கு பொருத்தமாக இருக்கும். இம்முறை பச்சை நிற லிப்ஸ்டிக்கை பார்த்த ரசிகர்களோ, அழகியான அக்காவை அலங்கோலமாக்கிவிட்டார்களே என்கிறார்கள்.

அக்கா, தயவு செய்து இனி பச்சை நிறத்தில் மட்டும் லிப்ஸ்டிக் போடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 40 வயதாகும் வனிதா விஜயகுமாரை பார்த்தால் மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு தாய் என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருக்கிறார் என்று அவ்வப்போது விமர்சனம் எழுவதுண்டு.

வனிதா தன் யூடியூப் சேனலில் வெளியிடும் சமையல் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வீடியோக்களை பார்த்து பலரும் சமைத்துவிட்டு சூப்பராக வந்திருக்கிறது அக்கா என்று கமெண்ட் போடுகிறார்கள்.

சமையல் வீடியோக்களை பார்த்தால் தான், நீங்கள் இதை எல்லாம் சாப்பிட்டும் எப்படி ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என்று ஆச்சரியமாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த வனிதா