கடந்த 2011 ஆம் ஆண்டு விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான படம் அவன் இவன். இந்தப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி இயக்குனர் பாலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார் பாலா.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆஜராகி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் இருந்து படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குனர் பாலா ஆஜராகியும் வழக்கு விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

மீண்டும் தமிழுக்கு வரும் பிரபல தயாரிப்பாளர் கே.சி.பொக்காடியா!
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பாலா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பாலா நீதிமன்றத்தில் ஆஜார் ஆனதை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு நடந்தது. அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.