கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ஓடிடிகளுக்கும், இணைய தொடர்களுக்கும் மவுசு கூடி வருகிறது. திரையுலக பிரபலங்களும் இணைய தொடர் எனப்படும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் Kaustubha Mediaworks சார்பில் தயாராகும் புதிய வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார்.

தமிழ் திரை வரலாற்றில் தற்போதைய காலகட்டம், இணைய தொடர்களின் பொற்காலமாக ஜொலித்து வருகிறது. பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், பெரும் ஆளுமைகள் இணைவில், பிரமாண்ட உருவாக்கத்தில் உருவாகும் இணைய தொடர்கள், ஒன்றன் பின் ஒன்றாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், ரசிகர்களை கொள்ளை கொள்ளும் படைப்பாக, ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் இயக்குனர் அட்லீயிடம் உதவியாளாராக பணியாற்றிய Enoc Able, புத்தம் புதிய ரொமான்ஸ் இணைய தொடர் ‘ஆகாஷ் வாணி’ யை இயக்கவுள்ளார்.

இந்த இணைய தொடரை அனுபவமிக்க இளம் திறமையாளர்களை ஒன்றிணைத்து, “ஆகாஷ் வாணி” என்ற பெயரில் தயாரிக்கிறது Kaustubha Mediaworks. பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் ‘ஆகாஷ்’ பாத்திரத்திலும், ஆல்பம் பாடலான ‘குட்டி பட்டாஸ்‘ மூலம் கவனத்தை ஈர்த்த, ரெபா ஜான் ‘வாணி’ பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். அண்மையில் வெளியான தனுஷின் “ஜகமே தந்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் வின்சா, அபிதா வெங்கட் ராமன், மேகி என்று அழைக்கப்படும் மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

மூன்றாம் கட்ட படப்பிடிப்பை துவங்கிய ‘பீஸ்ட்’ படக்குழுவினர்: உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!
ஆகாஷ் வாணி குறித்து இயக்குனர் Enoc Able கூறும்போது,“இத்தொடர் காதலை, காதல் உறவின் பிரச்சனைகளை பற்றி உணர்வுப்பூர்வமாக கூறும் ஒரு அழகான திரைக்கதை. இது பார்வையாளர்களை எளிதில், உணர்வுபூர்வமாக ஈர்க்கும் படியான படைப்பாக இருக்கும். எளிமையான மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் ஆன்மாவை ஈர்க்கும் இசை, கண்களை கவரும் ஒளிப்பதிவு, கச்சிதமாக பொருந்தும் இளம் நடிகர்கள் குழு, ஆகிய அனைத்தும் “ஆகாஷ் வாணி” தொடரை மிக அற்புதமான படைப்பாக மாற்றும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தொடர் குறித்து Kaustubha Mediaworks சார்பில் சோனியா ராம்தாஸ் கூறும்போது, அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் திரு ரமணன் அவர்களின் கதை, இளம் திறமையாளர் இயக்குனர் Enoc Able இயக்கம், சிறந்த நடிகர்கள் மற்றும் அட்டகாசமான தொழில் நுட்ப குழுவினர் இணைந்து, இரண்டு அழகான ஆத்மாக்களின் அளவுமீறிய அன்பின் கதையை, காதலை, அற்புதமான படைப்பாக தரவுள்ளார்கள். பார்வையாளர்கள் மனதை நிச்சயமாக இந்தக்காதல் கதை கவரும் என உறுதியாக நம்புகிறோம் என கூறியுள்ளார்.