ரஜினியுடன் ‘அண்ணாத்த‘, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்‘ உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளிலில் நடித்து போராடித்து விட்டதால் தற்போது காமெடி பக்கம் ஒதுங்க முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலு நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’எலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார் நயன்தாரா. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.

தனுஷை களமிறக்க போட்டி போடும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்: குவியும் வாய்ப்புகள்!
நயன்தாரா தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ’காத்து வக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்கிறார். அவரது ‘நெற்றிக்கண்’ திரைப்படம் OTT-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் நயன்தாரா ராஜா ராணி, பிகில் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.