ஹைலைட்ஸ்:

  • மாநாடு ட்ரெய்லரை கசியவிட்ட ரசிகர்
  • பிரச்சனையா இருக்குனு சொல்லி அழுத சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள். பின்னர் ரிலீஸ் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் மாநாடு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்.

பட நிகழ்ச்சியில் மாநாடு ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதை ரசிகர் ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்து ஆன்லைனில் கசியவிட்டுவிட்டார். அவர் செய்த காரியத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்து ட்ரெய்லரை அவசர, அவசரமாக ஆன்லைனில் வெளியிட்டது.

ட்ரெய்லரையே இப்படி கசியவிட்டுவிட்டார்களே என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுக்கிறாங்க, அதை நான் பார்த்துக்கிறேன், என்னை நீங்க பார்த்துக்கோங்க என்று கூறி சிம்பு அழுதார்.
அவர் அழுததை பார்த்த ரசிகர்கள், தலைவா நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பார்த்திராத சிம்புவை மாநாடு படத்தில் பார்க்கப் போகிறீர்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது சிம்பு கெரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நான் கல்யாணம் பண்ணா யுவன் மாதிரி…: ஆசையை சொன்ன சிம்பு