ஹைலைட்ஸ்:

  • வீட்டில் அழகாக தோட்டம் போட்டிருக்கும் சிவகார்த்திகேயன்
  • தோட்டத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட சிவகார்த்திகேயன்
  • வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து முன்னணி நடிகராகியிருக்கும் சிவகார்த்திகேயன் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். கோலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் சிறு தோட்டம் அமைத்து காய்கறி, கீரை பயிரிட்டு அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அப்படி ஒரு வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் வீட்டு தோட்டத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் அசந்து போயிருக்கிறார்கள்.

தன் தோட்டத்தில் நின்று சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாவது,

இது தான நம் காய்கறி தோட்டம். லாக்டவுனுக்கு கொஞ்ச நாளைக்கு முன்பு தான் ரெடி பண்ணது. காய்கறிகள், கீரைகள் எல்லாத்தையும் உங்களுக்கு காட்டலாம்னு தான் இந்த வீடியோ. இன்னும் அப்படியே ஃபுல்லா ரெடி பண்ண வேண்டும் என்று ஆசை. அதுக்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.

அது எல்லாம் ரெடியான உடனே உங்களுக்கு மீண்டும் காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்க. சீக்கிரமே நம்ம லைஃபும் இந்த மாதிரி செழிப்பாகிடும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவின் இறுதியில் தன் செல்ல மகள் ஆராதனாவுடன் வருகிறார். ஆராதனா மாஸ்க் அணிந்திருப்பதால் முகம் தெரியவில்லை. வீடியோவை பார்த்த ரசிகர்கள், சூப்பர் அண்ணா, அருமையான தோட்டம், நாங்களும் தோட்டம் போடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

சில ரசிகர்களோ, ஆராதனா பாப்பாவை மட்டும் காட்டியிருக்கிறீர்கள். அண்ணி ஆர்த்தியை காட்டவில்லையே அண்ணா என்று வருத்தப்பட்டுள்ளனர். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

கெரியரை பொறுத்தவரை புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். அந்த படத்தை லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார் சிவகார்த்திகேயன்.

கழுத்தை நெரிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்இந்நிலையில் அவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் 5 பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியானது. இரண்டு ஆண்டுகளில் 5 படங்களில் நடிக்க வேண்டுமாம். படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.