ஜூலை 16ம் தேதி இறந்த நடிகை சுரேகா சிக்ரி பற்றி நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறியது பலரையும் ஃபீல் செய்ய வைத்திருக்கிறது.

சுரேகா சிக்ரி

3 முறை தேசிய விருது வென்ற பிரபல பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி கடந்த 16ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. அவர் படங்கள் தவிர்த்து இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். ஆயுஷ்மான் குரானாவின் பதாய் ஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுரேகா. அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

ஆயுஷ்மான் குரானா

சுரேகா சிக்ரியின் மரண செய்தி குறித்து அறிந்த ஆயுஷ்மான் குரானா சமூக வலைதளத்தில் கூறியதாவது, ஒவ்வொரு படத்திலும் நமக்கு ஒரு குடும்பம் இருக்கும். நம் குடும்பத்தை விட சினிமா குடும்பத்துடன் தான் அதிக நேரம் செலவிடுவோம். அது போன்ற அழகான குடும்பம் தான் பதாய் ஹோ. என் அனைத்து படங்களுடன் ஒப்பிடும்போது பதாய் ஹோ தான் கச்சிதமான குடும்பம் என்றார்.

தலைவி

ஆயுஷ்மான் குரானா மேலும் கூறியதாவது, சுரேகா சிக்ரி தான் எங்கள் பதாய் ஹோ குடும்பத்தின் தலைவி. நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித் தான். பதாய் ஹோ படத்தை திரையிட்ட பிறகு ஆட்டோவுக்காக காத்திருந்தார் சுரேகா சிக்ரி. நானும், மனைவி தாஹிராவும் அவருக்கு லிஃப்ட் கொடுத்தோம். நம் படத்தின் நிஜ ஸ்டார் நீங்கள் தான் மேடம் என்று நான் கூறினேன். அதற்கு அவரோ, தனக்கு மேலும் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கூறியதை கேட்டு நானும், மனைவியும் சொல்வதறியாது இருந்தோம் என்றார்.

லெஜண்ட்

காரில் இருந்து இறங்கி தன் வீட்டை நோக்கி நடந்து சென்றார் சுரேகா சிக்ரி. அது தான் அவரை நான் கடைசியாக பார்த்தது. அவர் ஒரு லெஜண்ட். உங்களை மிஸ் பண்ணுவோம் சுரேகா மேடம். அழகிய நினைவுகளுக்காக நன்றி என்று தெரிவித்தார் ஆயுஷ்மான் குரானா.