‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்‘ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அண்மையில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தில் புதிதாக வில்லன் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மாஸ்டர் படத்தில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்கிறார். மேலும் அண்மையில் காளிதாஸ் ஜெயராமும் விக்ரம் படத்தில் இணைந்தார்.

விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் அண்மையில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதனை தொடந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஜூலை 16-ம் தேதி துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இது ரெண்டும் தான் என்னோட உற்சாகத்துக்கு காரணம்: சீக்ரெட் சொன்ன அமலா பால்!
இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். கையில் துப்பாக்கியை வைத்து கொண்டு கமல் நிற்கும் ஸ்டைலிஷ் போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தில் மெர்சல் பட நடிகர் ஹரீஷ் பேரடி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் கமலுக்கு வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது மெர்சல் பட வில்லன் ஹரீஷ் பேரடியும் ‘விக்ரம்; படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ‘விக்ரம்’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“விநோதய சித்தம்” நாடகம் – உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு!