ஹைலைட்ஸ்:

  • குடும்ப வீட்டை புதுப்பித்த கமல் ஹாசன்
  • குடும்ப வீட்டில் ஒன்று கூடிய ஹாசன்கள்

சென்னை எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் வீட்டில் தான் கமல் ஹாசன், சுஹாசினி உள்ளிட்டோர் வளர்ந்தார்கள். இந்நிலையில் அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்தது. புதுப்பிக்கும் பணி முடிந்த பிறகு கமல் ஹாசன் குடும்பத்தார் அங்கு ஒன்று கூடினார்கள்.

சாரு ஹாசன், அவரின் மனைவி கோமளம், சுஹாசினி மணிரத்னம், அனு ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். தங்களின் குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சுஹாசினி.

மேலும் அனுஹாசன், அக்ஷரா ஆகியோரும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்கள்.

அப்பா கமலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஸ்ருதி இதிலும் நீ இல்லை என்று தெரிவித்தார் அக்ஷரா. அதை பார்த்த ஸ்ருதி ஹாசன் சந்தோஷப்பட்டாலும், தன்னால் அங்கு செல்ல முடியவில்லை என்கிற வருத்தமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கமலின் மொத்த குடும்பத்தையும் ஒரு இடத்தில் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். அந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் இதுவரை தெரியவே இல்லை.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் என்று இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்: குஷியில் விஜய் சேதுபதி ‘மகன்’