தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோ பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹன்சிகாவிற்கு சமூக வலைத்தளம் வாயிலாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர். அதேபோல் நடிகை ஹன்சிகா இந்த வருட தன்னுடைய பிறந்தநாளை பம்பாயில் தனது தாய் மற்றும், தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் கொண்டாட உள்ளார்.

இது மட்டுமல்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்து பெண்களையும் கவனித்து வருகிறார் ஹன்சிகா. அவர்களின் முழு மருத்துவ செலவையும் அவரே ஏற்று கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவும், பரிசுப்பொருட்களும் ஏற்பாடு செய்துள்ளார் ஹன்சிகா.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “டான்” படக்குழுவினர்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
ஹன்சிகாவின் 50 வது படமாக மஹா உருவாகியுள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்குகிறார். உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மஹா படத்தை தொடர்ந்து “105 மினிட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா. இந்த படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கப்படவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.