ஹைலைட்ஸ்:

  • தசைநார் கிழிந்த பிரச்சனைக்கு ஆபரேஷன் செய்யாத மம்மூட்டி
  • 21 ஆண்டுகளாக ஆபரேஷனை தள்ளிப்போட்ட மம்மூட்டி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகரான மம்மூட்டி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியது தான் பலரையும் வியக்க வைத்துவிட்டது.

அந்த நிகழ்ச்சியில் மம்மூட்டி கூறியதாவது,

என் இடது காலில் இருக்கும் தசைநார் கிழிந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் காலின் நீளம் குறைந்துவிடும். அதனால் நான் அறுவை சிகிச்சை செய்யவில்லை. என் ஒரு காலின் நீளம் மட்டும் குறைந்தால் அது கேலி கிண்டலுக்கு ஆளாகும் என்றார்.

மம்மூட்டி கூறியதை கேட்டவர்களோ, அப்படி என்றால் 21 ஆண்டுகளாக கால் வலியுடன் தான் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்று வியக்கவும், அதே சமயம் அவருக்காக வருத்தப்படவும் செய்கிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை பீஷ்ம பர்வம் படத்தில் நடித்து வருகிறார் மம்மூட்டி. அமல் நீரத் இயக்கி வரும் அந்த படத்தில் சவ்பின் ஷாஹிர், ஸ்ரீநாத், ஷைன் டாம் சாக்கோ, திலீஷ் போத்தன், ஃபர்ஹான் ஃபாசில், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இது தவிர்த்து தன் மகன் துல்கர் சல்மான் தயாரிக்கும் புழு படத்தில் நடிக்கவிருக்கிறார் மம்மூட்டி. அந்த படத்தை உயரே படத்தின் எக்சிகியூட்டிவ் ப்ரொட்யூசரான ரதீனா இயக்குகிறார். புழு தான் ரதீனா இயக்கும் முதல் படமாகும். அந்த படத்தில் பார்வதி திருவோத்து நடிக்கிறார்.

Simbu வெளியானது வெந்து தணிந்தது காடு ஃபர்ஸ்ட் லுக்: ப்ப்பா, சிம்பு வேற லெவல்