ஹைலைட்ஸ்:

  • தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களை விளாசிய யாஷிகா
  • நான் குடிபோதையில் கார் ஓட்டவில்லை- யாஷிகா

யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

யாஷிகா வேகமாக காரை ஓட்டிச் சென்றது தான் விபத்திற்கு காரணம் என்றும், அவர் குடிபோதையில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் யாஷிகா குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா. அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

சட்டம் என்பது அனைவரும் ஒன்று தான். நான் குடிபோதையில் கார் ஓட்டினேன் என்று வதந்தி பரப்பும் சீப்பான அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாங்கள் குடிபோதையில் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்துவிட்டனர். அப்படி நான் குடிபோதையில் கார் ஓட்டியிருந்தால் இந்நேரம் மருத்துவமனையில் அல்ல மாறாக சிறையில் இருந்திருப்பேன்.

ஃபேக் ஆட்கள் ஃபேக் செய்திகளை பல காலமாக பரப்பி வருகிறார்கள். மருத்துவர்களின் அறிக்கையில் கூட நாங்கள் குடிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்யான செய்தியை பரப்பும் ஃபேக் மீடியா சேனல்கள் வெட்கப்பட வேண்டும்.

என் பெயரை கெடுத்ததற்காக நான் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்தேன். ஆனால் வதந்திக்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

சாரி பவானி, உயிரோட இருப்பதே குற்ற உணர்ச்சியா இருக்கு: யாஷிகாமேலும் பவானியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக உருக்கமான போஸ்ட் ஒன்றும் போட்டிருக்கிறார் யாஷிகா.