ஹைலைட்ஸ்:

  • அந்தகன் படத்திற்கு டப்பிங் பேசும் கார்த்திக்
  • அறுவை சிகிச்சை முடிந்ததும் வேலைக்கு திரும்பிய கார்த்திக்

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் இந்தி படத்தை தமிழில் பிரசாந்தை வைத்து அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன். அந்த படத்தில் சமுத்திரக்கனி, சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் கார்த்திக் டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் தன் வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது கால் தவறி கீழே விழுந்தார் கார்த்திக்.

இதில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த காலில் அடிபட்டு எலும்பில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கார்த்திக் அந்தகன் படத்திற்கு டப்பிங் பேச வந்துவிட்டார்.

டப்பிங் தியேட்டரில் பிரசாந்த் மற்றும் தியாகராஜனுடன் கார்த்திக்கை பார்த்த ரசிகர்கள், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அந்தகன் படத்தில் கொடூர வில்லியாக நடித்திருக்கிறார் சிம்ரன். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் அவருக்கு. அவர் முன்பும் கூட பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் சிம்ரனுக்கு அந்தகன் படம் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பிரசாந்துக்கு கம்பேக் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

மறுபடியும் தப்பு பண்றீங்க விஜய் சேதுபதி: இது சரியில்ல ஆமாம்