விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் போதினேனி நடிக்கும் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் ராம் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. உருவாகிறது. இந்நிலையில் லேட்டஸ் அப்டேட்டாக இந்த படத்தில் நடிகர் ஆதி இணைந்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நாயகனாக திகழும் ராம் போதினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இதன் நாயகியாக அண்மையில் வெளியான ‘உப்பெனா’ படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் படத்தில் ராம் போதினேனிக்கு வில்லனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் படக்குழு. ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப்படத்தில் வில்லனாக ஆதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக வம்பிழுந்த ரசிகர்கள்: கடுப்பான தனுஷ் பட இசையமைப்பாளர்!
தமிழில் நாயகனாக நடித்துவரும் ஆதி தெலுங்கில் ரேஸ் குர்ரம் உள்பட சில படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை 12 ஆம் தேதி முதல் லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர்கள் ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று லிங்குசாமியை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.