ஆர்.ஜே வாக பிரபலமான பாலாஜி அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் எல்கேஜி படம் மூலமாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது நடிகர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்த பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.ஜே., நகைசுவை நடிகர், ஹீரோ என தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட பாலாஜி சென்ற ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஓடிடி வெளியீடாக ரிலீசான இந்தப்படம் ரசிகர்கள் ,மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றினார்.

சிம்புவின் தாயார் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்!
பதாய் கோ தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதோடு இயக்கவும் செய்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தியில் ஆயூஷ்மான் நடித்த கேரக்டரில் தமிழில் பாலாஜி நடிக்க உள்ளார். மேலும் இந்தப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். சூரரைப் போற்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா பாலமுரளி இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக நடிக்கவுள்ளார்.

‘வீட்ல விசேஷங்க’ என இந்த படத்திற்கு தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்புக்காக பாக்யராஜிடம் உரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பை விரைவில் துவங்க ஆயத்தமாகி வருகின்றனர் படக்குழு. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி கோயம்புத்தூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.