ஹைலைட்ஸ்:

  • டோலிவுட்டில் இலியானாவுக்கு மறைமுக ரெட் கார்டு?
  • பாலிவுட்டை மட்டுமே நம்பி இருக்கும் இலியானா
  • பணப் பிரச்சனையால் இலியானாவுக்கு பட வாய்ப்புகள் இல்லையாம்

தேவதாசு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் இலியானா. கேடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர், நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

தெலுங்கு திரையுலகில் கொடிகெட்டிப் பறந்த இலியானா அப்பொழுதே கோடிகளில் சம்பளம் வாங்கினார். அவர் வாங்கிய சம்பளத்தை பார்த்து பிற நடிகைகள் எல்லாம் பொறாமைப்பட்டார்கள். இந்நிலையில் தான் அவருக்கு ரன்பிர் கபூரின் பர்ஃபி பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை பார்த்த இந்தி சினிமா ரசிகர்களும், பிரபலங்களும் இலியானாவின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று பாராட்டினார்கள்.

இதையடுத்து இனி நடித்தால் பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிச் சென்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பாலிவுட்டில் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. இருப்பினும் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு வரும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அமர் அக்பர் அந்தோணி படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு டோலிவுட்டில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதற்கு ரகசிய காரணம் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது தமிழ் தயாரிப்பாளர் ஒருவரிடம் வாங்கிய முன்பணத்தை இலியானா திருப்பிக் கொடுக்கவில்லையாம். இது குறித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாம். இலியானா ஏற்கனவே போட்ட சீன்களால் கடுப்பில் இருந்த டோலிவுட் தயாரிப்பாளர்கள் இந்த பண விவகாரத்தால் அவருக்கு மறைமுக ரெட் கார்டு போட்டுவிட்டார்களாம்.

டோலிவுட்டில் மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வந்துவிடலாம் என்று கனவு கண்ட இலியானாவுக்கு தலையில் இடியை இறக்கிவிட்டது போன்றாகிவிட்டது இந்த ரெட் கார்டு விவகாரம்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று டோலிவுட் கதவுகள் பூட்டப்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாலிவுட்டே கதி என்று சரணடைந்துவிட்டாராம்.

எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா?