தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார், நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அஜித் குமார் பைக்கில் ரைய்டு செல்லும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் பைக் மற்றும் கார் ரேஸ் காதலரான நடிகர் அஜித் குமார் பைக்கில் ரைய்டு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வலிமை’ படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் அஜித் குமார். அதனை தொடர்ந்து 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீனியர் பிரிவில் பங்கேற்று, 4 தங்கப்பதக்கம், 2 சில்வர் பதக்கம் வென்றார் அஜித் குமார்.

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படப்பிடிப்பிற்கு தயாராகும் சிம்பு – கெளதம் மேனன்!
இந்நிலையில் அண்மையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. போஸ்டரில் அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் அஜித் குமார் பைக்கில் ஹாயாக ரைய்டு செல்லும் புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்தப்படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார். தற்போது ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.