அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலைக்கு பொது மக்களும், திரையுலகினரும் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தனது வலைத்தள பக்கத்தில் நகைச்சுவை நடிகர் மனோபாலா செல்பி புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அந்த புகைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதனை தொடந்து தனது செல்பி புகைப்படம் குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மனோபாலா.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர் மனோபாலா. தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நகைச்சுவை வேடங்களில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார் மனோபாலா. இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா திரையுலக பிரபலங்களின் பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் வேஸ்ட் பேப்பர் என்ற பெயரில் யூ டியூப் சேனலையும் நடத்தி வரும் மனோபாலா அதில், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

மனைவியை அடித்து துன்புறுத்திய பிரபல நடிகர்: உடம்பில் காயங்களுடன் தூக்கிட்டு தற்கொலை!
சற்று சோர்வாகவும் படுக்கையில் இருப்பது போன்று தோற்றம் தந்த அந்த புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக நினைத்து என்னாச்சு சார்? கொரோனாவா? என நலம் விசாரிக்க துவங்கினார்கள். இந்நிலையில் அந்த புகைப்படம் சர்ச்சைகள் குறித்து பேசியுள்ள மனோபாலா, தனக்கு ஒன்றும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல. நான் நல்லாதான் இருக்கேன். ஒண்ணுமில்லை. அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.