ஹைலைட்ஸ்:

  • சந்தானத்தை விளாசும் நெட்டிசன்ஸ்
  • சந்தானத்துக்கு ஆதரவாக பேசும் ரசிகர்கள்

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டார் சூர்யா என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்று பாமக நிர்வாகி அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்நிலையில் ஜெய்பீம் குறித்து சந்தானம் பேசியது சினிமா ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என சந்தானம் தெரிவித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளை சைடு ஸ்டாண்டு என்று கிண்டல் செய்தவர் தானே நீங்கள் என்று சமூக வலைதளவாசிகள் சந்தானத்தை விளாசுகிறார்கள். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் சேர்ந்து சந்தானம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டு, இதனால் தான் கூவுகிறார் என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தானத்தை பலரும் விளாசுவதால் #சாதிவெறி_சந்தானம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அதை பார்த்த சந்தானத்தின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்யத் துவங்கிவிட்டனர்.

சூர்யாவை பத்தி நீங்க பேசக் கூடாது: ட்விட்டரில் டிரெண்டாகும் #சாதிவெறி_சந்தானம்#WeStandWithSanthanam என்கிற ஹேஷ்டேகுடன் அவர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.