அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்க்காக தவமாய் தவமிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இந்நிலையில் குறி சொல்பவரிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

முதலமைச்சர் தொடங்கி, கிரிகெட் வீரர்கள் வரை அனைவரிடமும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பியதை தொடர்ந்து, அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனையடுத்து கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியதை அடுத்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தனர் படக்குழுவினர். இதனால் அப்செட் ஆனா ரசிகர்கள் மறுபடியும் வலிமை அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த த்ரில்லருக்கு ரெடியாகும் த்ரிஷ்யம் கூட்டணி: மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்!
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று படு வேகமாக பரவி வருகிறது. அதில், சாமி ஆடும் நபர் ஒருவரிடம், வலிமை அப்டேட் கேட்டு அட்ராசிட்டி செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள். சாமியாரும் அவர்களுக்கு விபூதி வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார். சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக பொது இடங்களில் அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரிடமும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டதை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் மறுபடியும் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். அநேகமாக இந்த வலிமை அப்டேட் தொடர்பான செய்திகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.